< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் விரைவில் 2 ஆயிரம் தீயணைப்பு படைவீரர்களை நியமிக்க அரசு முடிவு
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் விரைவில் 2 ஆயிரம் தீயணைப்பு படைவீரர்களை நியமிக்க அரசு முடிவு

தினத்தந்தி
|
30 Jun 2022 2:17 AM IST

கர்நாடகத்தில் விரைவில் ௨ ஆயிரம் தீயணைப்பு படை வீரர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு

பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் ஜெயநகர் மண்டலத்திற்கான தீயணைப்பு துறைக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா திறந்து வைத்து பேசியதாவது:-

மக்களின் உயிர், அவர்களது உடைமைகளை பாதுகாப்பதில் தீயணைப்பு படைவீரர்களின் பங்கு மிகப்பெரிதாக உள்ளது. மாநிலத்தில் தீயணைப்பு படையின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தீயணைப்பு துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அரசு தயாராக உளளது. கர்நாடகத்தில் தீயணைப்பு படைக்கு புதிதாக 2 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்பேரில் விரைவில் 2 ஆயிரம் தீயணைப்பு படை வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 24 மணிநேரமும் ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 24 மணிநேரமும் ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்குவது சாத்தியமில்லை. ஓட்டல்கள் திறந்திருந்தால், அதற்காக நள்ளிரவிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்போது விமானம், பஸ், ரெயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ஓட்டல்கள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல், மற்ற பகுதிகளிலும் ஓட்டல்கள் திறப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். அதன்பிறகு தான் முடிவு செய்யப்படும்' என்றார்.

மேலும் செய்திகள்