< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!
|17 Jan 2023 11:37 AM IST
ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். புட்காம் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புட்காம் பகுதியில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.