ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
|ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள செக் மொஹல்லா நவ்போராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு நேற்று நள்ளிரவில் அமைதிக்கு வந்த பிறகு இன்று காலை மீண்டும் தொடங்கியது.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்ததாகவும் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டும் பணியில் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.