< Back
தேசிய செய்திகள்
சாலை விபத்துகளில் வாலிபர்கள் 2 பேர் சாவு
தேசிய செய்திகள்

சாலை விபத்துகளில் வாலிபர்கள் 2 பேர் சாவு

தினத்தந்தி
|
10 Jun 2022 8:43 PM IST

பத்ராவதி தாலுகாவில் சாலை விபத்துகளில் வாலிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அந்தரகங்கே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 35). இவர் நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சந்தோஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மஞ்சுநாத் மற்றும் முருகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த பத்ராவதி போலீசாா் சந்தோசின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா பகுதியை சேர்ந்த பீமப்பா அதே பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அவர் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பீமப்பா மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பீமப்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிசிக்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து தகவலின் பேரில் ஆஸ்பத்திரிக்கு வந்த பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்