< Back
தேசிய செய்திகள்
மானை வேட்டையாடிய 2 பேர் கைது
தேசிய செய்திகள்

மானை வேட்டையாடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2022 9:16 PM IST

சிவமொக்காவில் மானை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அருகே உம்பலேபயிலு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் புகுந்து சிலா் சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடி வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனத்துறையினர் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர்கள் பத்ராவதி தாலுகா உணசேகட்டே சந்திப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் மஞ்சுநாத் என்பதும், அவர்கள் மான்களை வேட்டையாடி இறைச்சி மற்றும் கொம்புகளை அதிகவிலைக்கு விற்றுவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ மான் இறைச்சி, கொம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்