< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
|5 Nov 2022 5:33 AM IST
ஹாசன் அருகே ஏரியில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர்.
ஹாசன்:
ஹாசன் (மாவட்டம்) தாலுகா தேஜூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு(வயது 35). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்(30). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்பெட்டாஸ் தயாரித்து விற்கும் தொழிலை செய்து வந்தார்கள். இதற்காக இருவரும் சேர்ந்து பலரிடம் கடனும் வாங்கி இருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே தொழில் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
அதையடுத்து இருவரும் தண்ணீர் மீது சத்தியம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு தங்கள் கிராமத்தையொட்டி உள்ள ஏரிக்கு சென்று ஒருவர் பின் ஒருவராக தண்ணீர் மீது சத்தியம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து ஹாசன் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.