< Back
தேசிய செய்திகள்
மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
தேசிய செய்திகள்

மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Sept 2023 12:15 AM IST

மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் டவுன் பகுதியில் நடந்த 2 திருட்டு வழக்குகள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் மங்களூரு கசப்பாவை சேர்ந்த பராஜ் (வயது 27), சொக்கப்பட்டு பகுதியை சேர்ந்த டோஸி (34) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.15½ லட்சம் மதிப்பிலான 223 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 2 பேரையும் கைது செய்ததன் மூலம் பனம்பூர் மற்றும் பண்ட்வால் டவுன் பகுதியில் பதிவாகியிருந்த திருட்டு வழக்கிற்கு தீர்வு கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்