< Back
தேசிய செய்திகள்
வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி
|
4 Sept 2022 8:26 PM IST

பொன்னம்பேட்டை அருகே வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குடகு;


குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை அருகே மினிலாரியில் மரக்கட்டைகள் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனையிட்டனர். லாரியில் மரக்கட்டைகள் இருந்தன. இதுதொடர்பாக லாரியில் இருந்த 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் குஞ்சிலா கிராமத்தை சேர்ந்த சுபேத் (வயது 43), மகேஷ் என்பதும், அவர்கள் பிரம்மகிரி வனப்பகுதியில் இருந்து மரங்களை வெட்டி கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மரக்கட்டைகளும், மினிலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்