< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
தேசிய செய்திகள்

பெங்களூருவில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

பெங்களூருவில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு-

பெங்களூரு திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரம்மா (வயது 60). இவர் அந்த பகுதியில் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம்போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது கடையின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென சந்திரம்மாவை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து உடனடியாக சந்திரம்மா, திலக்நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் காயமடைந்த சந்திரம்மாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வியாபாரியை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் வசந்த் குமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் என்பதும், குடும்ப விவகாரம் தொடர்பாக சந்திரம்மாவை அவர்கள் தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்