< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஸ்கரில் இரண்டு நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
|25 Dec 2022 12:03 AM IST
பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் பெண் நக்சல் உள்பட 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியானது, நக்சல்கள் அதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் பெண் நக்சல் உள்பட 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.