ஜி20 மாநாடு அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பூந்தோட்டிகளை பிஎம்டபுள்யூ காரில் திருடி சென்ற இளைஞர்கள்...!
|ஜி20 மாநாட்டிற்கு அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பூந்தோட்டிகளை சொகுசு காரில் வந்த இளைஞர்கள் திருடி சென்றனர்.
மும்பை,
ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் தற்போது ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஜி20 மாநாடு நடைபெறும் பகுதியில் ஆங்காங்கே அலங்காரத்திற்காக பூந்தோட்டிங்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, டெல்லியில் ஜி20 மாநாட்டின் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூந்தோட்டியை காரில் வந்த 2 பேர் எடுத்து சென்ற சம்பவம் சமீபத்தில் பரபரப்பானது.
இந்நிலையில், அதேபோன்ற சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. மராட்டியத்தின் நாக்பூரின் ரான பிரதாப் நகரில் ஜி20 மாநாட்டிற்காக சாலையோரம் அலங்கார பூந்தோட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்த பூந்தோட்டிகளை நேற்று முன் தினம் இரவு பிஎம்டபுள்யூ சொகுசு காரில் வைந்த 2 இளைஞர்கள் திருடி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் பூந்தோட்டிகளை திருடி சென்ற 25 மற்றும் 22 வயது இளைஞர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.