< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணின் அழகில் மயங்கிய 2 ஆண் ஊழியர்கள்
தேசிய செய்திகள்

இளம்பெண்ணின் அழகில் மயங்கிய 2 ஆண் ஊழியர்கள்: புதிய கட்டிடத்தில் விடிய விடிய செய்த விபரீத செயல்

தினத்தந்தி
|
4 July 2024 7:44 PM IST

கட்டுமான பணிகளை பார்வையிட வேண்டும் எனக்கூறி காரில் இளம்பெண்ணை அழைத்துச்சென்றுள்ளனர்.

ஐதராபாத் ,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மியாபூர் நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த சங்கா ரெட்டி மற்றும் ஜனார்தன் ரெட்டி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இளம்பெண்ணின் அழகில் மயங்கிய சங்கா ரெட்டி மற்றும் ஜனார்தன் ரெட்டி இருவரும் அவரை எப்படியாவது அடைய வேண்டும் என முடிவு செய்தனர். இந்தநிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் நடந்து வரும் கட்டுமான பணிகளை பார்வையிட வேண்டும் எனக்கூறி காரில் இளம்பெண்ணை அழைத்துச்சென்றனர்.

அங்குள்ள பணிகளை அவர்கள் சுற்றிக்காண்பித்தனர். பின்னர் காரில் ஏறி புறப்பட தயாரானார்கள். அப்போது கார் பழுதடைந்து விட்டது என பெண் ஊழியரிடம் கூறி ஏமாற்றினர்.

இதனை நம்பிய பெண் ஊழியர் காரிலேயே அமர்ந்திருந்தார். அவரிடம் நைசாக பேசி குளிர்பானம் சாப்பிட விரும்புகிறாயா என அவர்கள் கேட்டனர். அவர் வேண்டாம் என கூறினார். ஆனால் கட்டாயப்படுத்தி அவருக்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை கொடுத்தனர். மேலும் சில இனிப்பு வகைகளையும் கொடுத்தனர். அதனை சாப்பிட்டதும் இளம்பெண் மயக்கம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர். இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை விடிய விடிய மாறி மாறி பலாத்காரம் செய்தனர். காலையில் மயக்கம் தெளிந்து இளம்பெண் கண் விழித்தார். தனது நிலையை எண்ணி அழுது கதறி துடித்தார். இதை தொடர்ந்து இளம்பெண்ணை சக ஊழியர்கள் இருவரும் காரில் ஏற்றி அவர் தங்கியிருந்த விடுதி அருகே இறக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து இளம்பெண் மியாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கா ரெட்டி, ஜனார்தன் ரெட்டி ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு இருவரும் ஜெயலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்