< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு - 8 பேர் காயம்
|19 Feb 2023 9:32 PM IST
காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
காசியாபாத்,
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது, 10 முதல் 15 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று போலீசார் கூறினர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.