சத்தீஷ்கர்: கண்ணிவெடி தாக்குதலில் 2 பேர் பலி
|சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் நாராயன்பூர் மாவட்டத்தின் ஷுடா டோன்கர் பகுதியில் உள்ள தனியார் சுரங்கத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு நக்சலைட்டுகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி திடீரென வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.