< Back
தேசிய செய்திகள்
பீகாரில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் உயிரிழப்பு !
தேசிய செய்திகள்

பீகாரில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் உயிரிழப்பு !

தினத்தந்தி
|
19 Feb 2023 7:12 PM GMT

பீகாரில் பார்க்கிங் தகராறில் 2 பேர் பலி, கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஜெதுலி கிராமத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக இரு குழுக்களிடையே மோதிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது வன்முறையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் நாளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வீடு தீ வைக்கப்பட்டது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்