< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருவர் பலி
|22 Sept 2023 3:12 AM IST
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
கீவ்,
ரஷியா-உக்ரைன் போரில் சமீப காலமாக இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷியா சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் சேதமடைந்தன.
மேலும் இந்த தாக்குதலில் உக்ரைனின் தெற்கே உள்ள கெர்சோன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.