< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் கைதி தப்பியதால் 2 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்
|3 Nov 2022 6:02 AM IST
உத்தரபிரதேசத்தில் கைதி தப்பியதால் 2 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் பிரவீன் பால் என்பவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் டியோரியா ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 சிறை காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் பிரவீன் பால், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து கைதியின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததாக, சிறைக்காவலர்கள் 2 பேரை நேற்று சிறை நிர்வாகம் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்தது. தப்பியோடிய கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன.