< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய இண்டிகோ ஊழியர்கள் இருவர் கைது
|15 Sept 2022 9:28 PM IST
கோழிக்கோடு விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவிய இண்டிகோ ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு,
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் இருவரை தடுத்து நிறுத்திய சுங்கத் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
சஜித் ரகுமான் மற்றும் முகமது சாமில் என அடையாளம் காணப்பட்ட இண்டிகோ ஊழியர்கள், ஒரு பயணிக்கு 4.9 கிலோ தங்கத்தை அரை-திட வடிவில் (Semi-Solid state) கடத்த உதவிய போது பிடிபட்டனர்.
அந்தப் பயணி விமான நிலையத்தில் தன்னுடயை லக்கேஜை விட்டுவிட்டு தப்பியோடினார். அந்த லக்கேஜிலிருந்து தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 2.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.