உ.பி: தொழிலதிபரை கடத்திய வழக்கில் காவலர் உட்பட இருவர் கைது
|உத்தரபிரதேசத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் காவலர் உட்பட இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
கான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று மாலை மளிகை கடைக்குள் புகுந்த நபர் ஒருவர், தான் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவர் என்று கூறி, ரகுவீர் சந்திர கபூர் என்பவரை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
பின்னர், பூரின் மருமகன் பங்கஜ் கபூரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உனது மாமாவை விடுவிக்க வேண்டுமானால், ரூ. 35,000 கொடுக்கவேண்டும். இல்லையென்றால் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்ததுடன், கடத்தப்பட்ட நபரையும் மீட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தல் வழக்கில் தொடர்புடைய காவலர் உட்பட இருவரை கைதுசெய்த போலீசார், இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.