< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருவிழாவுக்கு சென்ற 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை
|14 March 2023 3:19 AM IST
கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.
பதேபூர்,
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ளது உசேன்கஞ்ச் கிராமம். இங்குள்ள 2 சிறுமிகள் அரசு ஆஸ்பத்திரியில் மோசமான நிலையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அவர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
அதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரி கூறும்போது, "2 சிறுமிகள் நேற்று முன்தினம் மாலை கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.
பின்னர் அவர்களை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சிறுமிகள் மோசமாக பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சிறுமிகளை பலாத்காரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்" என்றார்.