< Back
தேசிய செய்திகள்
வெவ்வேறு இடங்களில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்பு;  போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

வெவ்வேறு இடங்களில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்பு; போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
16 July 2022 9:14 PM IST

சிக்கமகளூருவில் வெவ்வேறு இடங்களில் முதியவர் உள்பட 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு டவுன் அருகே உள்ள கல்தொட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 60). இவர் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்துள்ளார்.இதனால் நேற்று முன்தினம் அவர் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இ்டத்திற்கு வந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார், உடலை மீட்டு பிேரத பாிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் சிக்கமகளூரு பஸ் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் போில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இந்த இரண்டு சம்பவம் குறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்