< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

தினத்தந்தி
|
27 Dec 2022 3:51 AM IST

ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஜம்முவை நோக்கி சென்றது. அதிகாலை நேரத்தில் ரம்பன் மாவட்டம் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் தெற்கு ஜம்முவை சேர்ந்த டிரைவர் அல்யாஸ் அகமது கட்னா (வயது 40) மற்றும் கிளீனர் சமீர் (26) ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பனிமூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காலி சிலிண்டர்கள் என்பதால் பெரும் விபத்து ஏதும் நடக்கவில்லை.

மேலும் செய்திகள்