< Back
தேசிய செய்திகள்
அரியானா: டயர் வெடித்து மேம்பாலத்தில் இருந்து லாரி விழுந்ததில் 2 பேர் பலி, 3 பேர் காயம்
தேசிய செய்திகள்

அரியானா: டயர் வெடித்து மேம்பாலத்தில் இருந்து லாரி விழுந்ததில் 2 பேர் பலி, 3 பேர் காயம்

தினத்தந்தி
|
24 May 2023 1:16 AM IST

டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தில் இருந்து விழுந்தது.

அரியானா,

அரியானாவில் இருந்து லாரி ஒன்று 20க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது. டெல்லி-மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள இப்ராஹிம் பாஸ் கிராமத்தில் லாரி வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தில் இருந்து விழுந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் 4 எருமை மாடுகளும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்