மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் குண்டுவெடிப்பு- 2 பேர் பலி, ஒருவர் காயம்
|மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மால்டா,
மேற்கு வங்காளம் மாநிலம் மால்டா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கச்சா வெடிகுண்டு விபத்தில் பர்ஜான் எஸ்கே (வயது 45), சஃபிகுல் இஸ்லாம் என்ற (வயது 30) இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
வயல்வெளியில் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு காயமடைந்த நிலையில் இருந்த 3 பேர் மீட்கப்பட்டு மால்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். வெடிகுண்டுகள் தயாரித்ததற்கான நோக்கம் குறித்தும் இவ்வளவு அளவிலான வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.