< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 பேர் உயிரிழப்பு
|4 April 2023 5:00 AM IST
அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் ஷெல்பி நகரில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மலையேற்ற வீரர் ஒருவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று அவர் இருக்கும் இடத்துக்கு புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டரில் விமானி உள்பட 4 மருத்துவ ஊழியர்கள் இருந்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.