< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தான்: திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர்கள் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி- 50 பேர் காயம்
|9 Dec 2022 8:46 AM IST
ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு காஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஜோத்பூரில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிவிபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.