< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழப்பு
|31 July 2022 3:13 PM IST
ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் பில்லாவர் கிராமத்தில் இன்று பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பில்லாவரில் வீடு இடிந்து விழுந்து அப்பாவி உயிர்கள் பலியானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் துயரமானது. இந்த துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய கத்துவா மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.