< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசம்: நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் பலி
|3 March 2023 1:28 AM IST
இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் சிக்கி இருவர் பலியாகினர்.
சிம்லா,
இமாசலபிரதேசம், மண்டி மாவட்டம் பதார்-ஜோகேந்திரநகர் நெடுஞ்சாலையில் தமேலா அருகே வந்து கொண்டிருந்த கார் ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 வாலிபர்கள் உடல் கருகினர்.
இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்த வாலிபர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பதார் மாவட்டத்தை சேர்ந்த புவன் சிங் (வயது 38), சுனில்குமார் (28) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதம்சிங் (27) என்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பதார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.