< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
தேசிய செய்திகள்

மைசூருவில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

மைசூருவில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மைசூரு-

மைசூரு மாவட்டம் நஜர்பாத் பகுதியில் உள்ள சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அந்த பெண் நஜா்பாத் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் நஜர்பாத் பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 பவுன் தங்கநகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் 2 பேரும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்