< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
|14 March 2023 10:00 AM IST
கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் கங்கனாடி ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டு கஞ்சா விற்ற 2 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பண்ட்வாலை சேர்ந்த அப்துல் சாதிக் (வயது 35), பெல்தங்கடியை சேர்ந்த நவாஸ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சா, ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.