< Back
தேசிய செய்திகள்
சுற்றுலா சென்ற இடத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

சுற்றுலா சென்ற இடத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
6 Sept 2023 8:54 PM IST

குற்றவாளிகளில் ஒருவன் அந்த பெண்ணுக்கு நன்கு அறிமுகமான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் சங்கர்ஹர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கு அதேபகுதியை சேர்ந்த சதாம் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த இளம்பெண் தனக்கு நன்கு அறிமுகமான சதாம்கான் மற்றும் அவரின் நண்பர் இம்தியாஸ் உடன் நேற்று முன் தினம் அண்டை மாவட்டமான ஜஸ்பூரின் டன்ஹரி பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு சென்றபோது இளம்பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த இளம்பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள சதாம்கான் மற்றும் இம்தியாசை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்