ஹரியானாவில் 19 வயது நபர் சுட்டுக்கொலை: காதலியின் முன்னாள் காதலன் கைது
|ஹரியானாவில் காதல் விவகாரத்தில் 19 வயது நபரை சுட்டுக்கொன்ற நபர் கைதுசெய்யப்பட்டார்.
ரேவாரி,
ஹரியானா மாநிலம் தருஹேராவில் பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞரை அப்பெண்ணின் முன்னாள் காதலன் சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றவாளியான உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சன்ராக் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (26) என்பவரை கைது செய்து இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
புகாரின்படி, அந்த பெண் ஏழு ஆண்டுகளாக மனோஜுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். இருவருக்குள்ளே விரிசல் ஏற்பட்டதால், அப்பெண் தற்போது மனீஷுடன் வாழத் தொடங்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள ஜிரோலி கிராமத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் (19) என்பவர் அப்பெண்ணுடன் கடந்த 15 நாட்களாக லிவ் இன் உறவில் இருந்துள்ளார். இது மனோஜுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.
மனோஜ் சனிக்கிழமை இரவு அந்த பெண்ணையும் மனீஷையும் அவர்களது அறைக்கு சென்று பார்த்தார். மணீஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அவரை நெற்றியில் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர தலைமறைவானார்.
பின்னர் போலீசாஅர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட மனோஜ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.