< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் பலத்த மழை: கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் பலி
|12 Sept 2023 12:28 AM IST
உத்தரபிரதேசத்தில் பலத்த மழை 19 பேர் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை தொடர்பான சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
ஹர்டோயில் 4 பேர், பாரபங்கியில் 3 பேர், பிரதாப்கர் மற்றும் கன்னோஜ் பகுதியில் தலா இரண்டு பேர், அமேதி, தியோரியா, ஜலான், கான்பூர், உன்னாவ், சம்பல், ராம்பூர் மற்றும் முசாபர்நகர் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் நான்கு பேர் மின்னல் தாக்கியும், இருவர் நீரில் மூழ்கியும், உயிரிழந்துள்ளனர்.