< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் தற்கொலை..!
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் தற்கொலை..!

தினத்தந்தி
|
3 Aug 2023 3:42 PM IST

ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கோட்டா,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம் அதன் பயிற்சி மையங்களுக்கு பிரபலமானது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த மன்ஜோத் சிங் என்ற மாணவர், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்காக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோட்டாவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்தார். இந்த நிலையில் இன்று காலையில் விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மன்ஜோத் சிங் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடலை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் கோட்டாவில் இதுவரை 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மாதம், ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மே மாதம் கோட்டாவில் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

மேலும் செய்திகள்