உத்தரபிரதேசத்தில் ஓடும் காரில் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமி - 2 பேர் கைது
|உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோண்டா,
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது 17 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் காரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறியிருந்தார்.
விசாரணையில் சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்ற அவர்கள், ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி, ஓடும் காரிலேயே சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதனால் காரையும், சிறுமியையும் அங்கேயே விட்டுவிட்டு வாலிபர்கள் ஓடிவிட்டனர். சிறுமி தள்ளாடியபடி வீடு வந்து சேர்ந்து தாயாரிடம் நடந்ததை கூறி உள்ளார்.
இதையடுத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், ஒரு துக்க நிகழ்வுக்கு செல்வதாக கூறி, காரை மற்றொரு நண்பரிடம் இரவல் வாங்கி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை நடந்து வருகிறது.