< Back
தேசிய செய்திகள்
17 வயது பள்ளிக்கூட மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு
தேசிய செய்திகள்

17 வயது பள்ளிக்கூட மாணவி முகத்தில் ஆசிட் வீச்சு

தினத்தந்தி
|
14 Dec 2022 2:02 PM IST

மாணவி மீது ஆசிட் வீசுவது சிசிடிவி வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

புதுடெல்லி,

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவி மீது ஆசிட் வீசுவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அதை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆசிட் வீச்சுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மேலும் செய்திகள்