அதிவேகமாக சொகுசு காரை ஓட்டிய சிறுவன்: பைக் மீது மோதி 2 பேர் பலி
|சிறுவன் ஓட்டிய சொகுசு கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் தனது தந்தையின் சொகுசு காரை இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஓட்டி சென்றுள்ளார்.
கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனுஷ், கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினான்.
விபத்தை ஏற்படுத்திய கார் தடுப்பு சுவரில் மோதி நின்றநிலையில் அதை சுற்றுவளைத்த அக்கம்பக்கத்தினர் காரை ஓட்டிய சிறுவன் வேதாந்த் அகர்வாலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.