நடப்பாண்டு அக்டோபர் வரை சரக்கு ரெயில் வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு
|நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரெயில்கள் மூலம் மொத்தம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கடந்த ஆண்டு 786.2 மெட்ரிக் டன்னாக இது இருந்தது. இதனால், சரக்குகள் கையாளுதல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 9% அதிகரித்துள்ளது.
இதேபோல் நடப்பாண்டு அக்டோபர் மாதம் சரக்கு ரெயில்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் ரூ.92,345 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதே அக்டோபர மாதம் வரை வருவாய் ரூ.78,921 கோடியாக இருந்தது. இதனால் சரக்கு ரெயில் வருவாய் 17% அதிகரித்துள்ளது.
அதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 117.34 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகள் கையாளுதல் இந்த அக்டோபர் மாதம் மட்டும் 118.94 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சரக்கு ரயில் வருவாய் 8% அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.