< Back
தேசிய செய்திகள்
அசாமில் கடந்த மாதத்தில் புயல், மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

அசாமில் கடந்த மாதத்தில் புயல், மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
26 April 2023 11:30 PM IST

அசாமில் கடந்த மாதத்தில் புயல், மின்னல் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கடந்த மாதத்தில் புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் 4 சிறார்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் புயலால் 12 மாவட்டங்களில் உள்ள 230 கிராமங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 42,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதம் 15 முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை 10 பேர் மின்னல் தாக்கியும், 7 பேர் புயல் காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.

புயல் காரணமாக, டின்சுகியா மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நாகோன், திப்ருகார், சிராங், தேமாஜி மற்றும் கரீம்கஞ்ச் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மின்னல் தாக்கி போங்கைகானில் இரண்டு பேரும், தர்ராங், கம்ரூப் (மெட்ரோ), கரீம்கஞ்ச், கோல்பாரா, ஹோஜாய், கச்சார், நாகோன் மற்றும் தேமாஜி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்