< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரம்: கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த ரெயில்வே பாலம்.. 17 தொழிலாளர்கள் பலி
|23 Aug 2023 12:46 PM IST
கட்டுமானப் பணியின்போது ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சாய்ராங்,
மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் ஐஸ்வாலில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 10 மணியளவில் 35-40 தொழிலாளர்கள் ரெயில்வே பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் பலியானார்கள். 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முதல் மந்திரி ஜோரம்தங்கா இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.
ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், வடகிழக்கு எல்லை ரெயில்வேயின் மூத்த அதிகாரிகளும் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்கள் எனவும் ரெயில்வே துறை தெரிவித்து உள்ளது.