< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்: பஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்
|5 Dec 2022 8:14 PM IST
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் திருமண விழாவில் பங்கேற்க சென்ற 17 பேர் காயமடைந்தனர்.
ரஜோரி,
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் திருமண விழாவில் பங்கேற்க சென்ற 17 பேர் காயமடைந்தனர்.
தர்குண்டி எல்ஓசி சாலை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஜிஎம்சி ரஜோரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.