< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியப்பிரதேசம்: பேருந்து கவிழ்ந்து விபத்து - 17 பேர் காயம்
|24 July 2022 1:57 AM IST
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
சேஹோர்,
மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இந்தூருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌபால் சாகர் பகுதிக்கு அருகில் வந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பதினேழு பேர் காயமடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.