16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் ; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
|சித்ரதுர்காவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா அப்பினஒலே கிராமத்தை சேர்ந்தவர் திம்மையா (வயது 23). இவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது வீட்டின் அருகில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. பெற்றோர் டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தபோது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் விசாரித்தனர்.
அப்போது சிறுமி நடந்ததை எடுத்து கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திம்மையாவை கைது செய்து சித்ரதுர்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி இறுதி தீர்ப்பு அளித்தார். அதில் வாலிபர் திம்மையாவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.