< Back
தேசிய செய்திகள்
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - முதியவர் கைது
தேசிய செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - முதியவர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2024 9:17 PM IST

வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை முதியவர் மிரட்டியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்த 73 வயதான முதியவர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். முதியவர் என்பதாலும், அருகில் வசிப்பவர் என்பதாலும் சிறுமியும் சகஜமாக பழகி வந்துள்ளார். ஆனால் சிறுமியிடம் முதியவர் தவறான எண்ணத்துடன் பழகியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டிற்கு சென்ற அந்த முதியவர், சிறுமியின் வாயை கட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

முதியவரால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்