< Back
தேசிய செய்திகள்
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ்
தேசிய செய்திகள்

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருக்கு தகுதி நீக்க நோட்டீஸ்

தினத்தந்தி
|
25 Jun 2022 7:54 PM IST

திங்கள் கிழமைக்குள் நோட்டீஸ்-க்கு பதிலளிக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் முகாமிட்டு உள்ளார். மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றுள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதலில் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து சஞ்சய்ராய் முல்கர், ஸ்ரஹிமேன்படேல், ரமேஷ் பார்னரே, பாலாஜி கல்யாண்கர் ஆகிய 4 உறுப்பினர்களுக்கு நோட் டீஸ் அனுப்பி உள்ளது. மொத்தம் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. திங்கள் கிழமைக்குள் நோட்டீஸ்-க்கு பதிலளிக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த நோட்டீசை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் இருப்பதாக ஏக்னாத் ஷிண்டே தரப்பு கூறி வருகிறது.

மேலும் செய்திகள்