< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அன்பு ஜோதி ஆசிரமத்தில் 16 பேர் மாயம் - பெங்களூரு விரைந்த சிபிசிஐடி போலீசார்
|25 Feb 2023 2:56 PM IST
அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமானவர்கள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூருவுக்கு சென்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமானவர்கள் குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூருவுக்கு சென்றனர்.
அன்பு ஜோதி ஆசிரமத்தில் மாயமான 16 பேர் குறித்து சிபிசிஐடி எஸ்பி அருண்கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட குழுவினர், நான்கு தடவியல் குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.
அதில், மாயமான 16 பேரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே வேறு ஒரு ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனிடையே, சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார், பெங்களூரு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.