< Back
தேசிய செய்திகள்
ஆந்திர சட்டசபையில் 15 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
தேசிய செய்திகள்

ஆந்திர சட்டசபையில் 15 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

தினத்தந்தி
|
22 Sept 2023 2:22 AM IST

ஆந்திர சட்டசபையில் 15 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விஜயவாடா, -

ஆந்திர மாநில சட்டசபை கூட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த கூட்டம் இம்மாதம் 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு கைது குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று மந்திரி புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி சபாநாயகரிடம் பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக 14 தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்களையும், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஒருவரையும் சபாநாயகர் தம்மினேனி சீதாராம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்