< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை
தேசிய செய்திகள்

கேரளாவில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை

தினத்தந்தி
|
30 Jan 2024 12:39 PM IST

ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் அவரை வெட்டிக் கொன்றது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பாஜக மாநில குழு உறுப்பினரான ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் முன்னிலையில் வெட்டிக் கொன்றது.

ரஞ்சித் ஸ்ரீனிவாசை கொலை செய்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க மாவேலிக்கா கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்