< Back
தேசிய செய்திகள்
திருமணமான 15 நாட்களில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

திருமணமான 15 நாட்களில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை

தினத்தந்தி
|
5 Sept 2022 8:36 PM IST

மங்களூருவில் திருமணமான 15 நாட்களில் விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

மங்களூரு;

எலி மருந்தை சாப்பிட்டார்

மங்களூரு கோனஜே அருகே அம்பிளாமொகரு கிராமத்தை சேர்ந்தவர் ரஷ்மி (வயது 24). இவருக்கும் கஞ்சிமடாவை சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ந்தேதி திருமணம் நடந்தது. சந்தீப் துபாயில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி ரஷ்மியின் அக்காள் வீட்டில் புதுமண தம்பதிக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனால் ரஷ்மியும், சந்தீப்பும் அங்கு சென்றனர். அங்கு வைத்து, ரஷ்மி எலி மருந்தை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் வாயில் நுரை தள்ளியப்படி மயங்கி விழுந்தார்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ரஷ்மியை மீட்டு சிகிச்சைக்காக தேரலகட்டேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரஷ்மி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோனஜே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ரஷ்மி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்