< Back
தேசிய செய்திகள்
ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்
தேசிய செய்திகள்

ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்

தினத்தந்தி
|
27 April 2024 11:39 AM IST

விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று மந்தர் போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தின் மந்தர் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பஸ் வழக்கம்போல இன்று காலை 30 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு திருப்பத்தில் பஸ் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்று மந்தர் போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்தார்.

மேலும் இந்த விபத்தில் மாணவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவனுக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. மற்றப்படி அனைத்து மாணவர்களும் நலமாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்